என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விடுதி உரிமையாளர்"
கோவை:
கோவை பீளமேட்டில் விடுதி மாணவிகள் 5 பேரை ஓட்டலுக்கு அழைத்து சென்று விருந்து கொடுத்து பெண் வார்டன் பாலியலுக்கு அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட விடுதி உரிமையாளர் ஜெகநாதன் (45) நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தலைமறைவான பெண் வார்டன் புனிதா(32) கடந்த 1-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.
புனிதா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தேன். எனக்கு 2குழந்தைகள் உள்ளனர். ஜெகநாதன் கூறியதால் மாணவிகளை ஓட்டலுக்கு விருந்துக்கு அழைத்து சென்று பீர் வாங்கி கொடுத்தேன். மாணவிகள் மறுத்த போது அவர்களை ஜெகநாதனுடன் செல்போனில் ‘வீடியோ கால்’ பேசி ஜாலியாக இருக்குமாறும், அவ்வாறு செய்தால் வசதியாக இருக்கலாம் என கூறி தவறான பாதைக்கு அழைத்தேன்.
இதற்கு முன்பு எந்த பெண்ணையும் ஜெக நாதனுடன் பேச வைக்க வில்லை. முதல் முறையாக பேச வைத்த போது சிக்கலாகி விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதை அறிந்ததும் நான் தப்பி சென்று உறவினர் வீட்டில் பதுங்கினேன். அப்போது தான் ஜெகநாதன் இறந்தது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்வார் என எதிர்பார்க்கவில்லை.
என்னிடம் ரூ.10 ஆயிரம் மட்டுமே இருந்தது. இதை வைத்து அதிக நாட்கள் வெளியூரில் தங்கியிருக்க முடியாது என நினைத்தேன். எனது செல்போன் எண் மூலம் போலீசாரும் தேடுவதால் எப்படியும் மாட்டிக் கொள்வேன் என நினைத்து கோர்ட்டில் சரண் அடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புனிதாவின் வாக்கு மூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.
போலீஸ் காவல் முடிந்து புனிதா நேற்று மாலை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14-ந் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து புனிதா கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்களிடம் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன. இந்த காட்சிகள் ஓட்டலில் எடுக்கப்பட்டதா? அல்லது வேறு எங்காவது வைத்து எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை.
சம்பவத்தன்று ஓட்டலில் என்ன நடந்தது? மாணவிகளுக்கு விருந்து கொடுத்து ஜெகநாதன் அத்துமீறினாரா? என்பதை கண்டுபிடிக்க ஓட்டல் உரிமையாளரை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெகநாதன் பெண்களிடம் அத்து மீறிய வீடியோ காட்சிகளை வழக்கின் முக்கிய ஆதாரமாக கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்